கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பலில் தீ

தென் கடற்பரப்பில் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்த கப்பலில் தீ பரவியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இத் தீ மலாக்கா சமுத்திர பகுதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
MSC Messina எனும் கப்பலின் எஞ்சின் அறையில் தீ பரவியுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டார்.
இந்த கப்பல் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.