சமூகத்தில் எந்த இடத்திலும் கொரோனாத் தொற்றாளர்கள் இருக்கக்கூடும்! – மக்களே மிக அவதானம்.
“சமூகத்தில் எந்த இடத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கக்கூடும். எனவே, வைரஸ் பரவக் கூடிய அபாயம் காணப்படுகின்றது. சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தினார் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண.
ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. நாளாந்த நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்பவர்கள் அவதானமாகவே இருக்க வேண்டும். சமூகத்தில் எந்த இடத்திலும் தொற்றாளர்கள் இருக்கக்கூடும். அவர்களுடன் பழகுவதன் ஊடாக உங்களுக்கும் தொற்று ஏற்படலாம்.
எனவே, சுகாதார நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை உரிய வகையில் பின்பற்றுமாறு கேட்கின்றோம்.
அநாவசியமான முறையில் வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம்” – என்றார்.