மட்டக்களப்பு ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் 1300 பேருக்கு தடுப்பூசி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 1300 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு (25) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 4500 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்ற நிலையில் இவர்களில் 2500 பேரிற்கு ஏலவே முதற்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில் இன்று 1300 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி அவர்களது ஏற்பாட்டில் 11 சிங்க ரெஜிமெந்து படைப்பிரிவின் கொமாண்டிங் பிரதானி மஞ்சுள உதயகுமார அவர்களது வழிகாட்டலில், தாழங்குடா இராணுவ முகாமின்
கப்டன் அதுகொரளவின் மேற்பார்வையில் குறித்த தடுப்பூசிகள் இராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் ஊடாக ஆடைத்தொழிற்சாலையில் வைத்து ஏற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்த தடுப்பூசிகளை வழங்கிய மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கு நின்றியினை தெரிவித்ததுடன், குறிப்பாக தங்களது ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றிய பின்னர் அச்சத்தோடு பணியாற்றி வந்த போதும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுவது தமக்கு ஒரு ஆறுதலாக இருப்பதாகவும் இச் செயற்பாட்டினால் தங்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகமும் அச்சமற்ற ஒரு நிலைமையில் வாழ வழிவகுக்கும் எனவும் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.