சிட்னி நகரின் அனைத்து பாகங்களிலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை.

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரின் அனைத்து பாகங்களிலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,டெல்டா வைரஸ் திரிபு பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதற்கமைய , இன்று மாலை 6 மணிமுதல், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் இதுவரையில் 650,000 க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதுடன்
10,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.