“எக்ஸ் ப்ரஸ் பேர்ள்” கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆராய்வதற்கு நவீன கப்பல் வருகை.

இந்திய கடற்படையின் அதிநவீன கப்பலான INS Sarvekshak எனப்படும் கப்பல் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தது.
புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு வசதியைக் கொண்டுள்ள இக் கப்பல் சமுத்திர வளத்தை மிகவும் துல்லியமாக கண்காணிக்கும் வல்லமையை கொண்டது.
X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தக் கப்பல் இந்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது..
ஆய்வு செய்யப்படவுள்ள பகுதிகள் தொடர்பான விபரங்கள் படத்தில் காணப்படுகிறது.