இருவரைத் தாக்கிச் சிலுவையில் அறைந்த பூசாரி உள்ளிட்ட குழுவினருக்கு வலைவீச்சு.

பலகொல்ல பிரதேசத்தில் இருவரை அழைத்துச் சென்று சிலுவையில் அறைந்து உடலில் காயங்களை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் குறித்த பிரதேசத்திலுள்ள கோயில் ஒன்றின் பூசாரி உள்ளிட்ட குழுவினரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பூசாரியை ‘பேஸ்புக்’ ஊடாக விமர்சித்தமைக்காக குறித்த இருவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்த பூசாரி, ஒரு சிலரின் உதவியுடன் அவர்களைத் தாக்கியுள்ளதுடன் பின்னர் சிலுவையில் அறைந்து உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்தச் சம்பவத்தையடுத்து பூசாரி உள்ளிட்ட குழுவினர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும், அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பலகொல்ல ஈடுபட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.