ஆயுதங்களுடன் ஐவர் கைது!

இரத்தினபுரி, அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்தக் குற்றச்சாட்டில் ஐவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அங்குலான பிரதேசத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.