சிற்பகலையால் ஒரு இசை- பத்மநாபுரம் அரண்மனை

ஆசியா முழுவதிலும் மிகப்பெரிய மர அரண்மனையாக,  பத்மநாபபுரம் அரண்மனை  கருதப்படுகிறது. இதன் பழமை 400 ஆண்டுகளுக்கும் மேலானது.  மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த கட்டிடக்கலை சேர நாட்டின் கலாச்சார செழுமையை சித்தரிக்கிறது.

6.5 ஏக்கர் பரப்பளவில் 15 க்கும் மேற்பட்ட மாளிகைகள் கொண்ட இந்த அற்புதமான அரண்மனை கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் நுணுக்கமான மரவேலைகள் கொண்டவை.  இது பழம்கால கைவினைஞர்களின்  திறன்களை எடுத்துக்காட்டுகிறது.

இந்த பரந்த அரண்மனை வளாகம், ஒரு கல் கோட்டையால் பாதுகாக்கப்பட்டுள்ளது, கோட்டை சுவர்களைச் சுற்றி ஒரு அகழி உள்ளது.  கோட்டைச் சுவரின் மேற்குப் பகுதியில் பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது.  அரண்மனை வளாகம் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கிடைத்த கற்களால், அஸ்திவாரத்தை உருவாக்கியுள்ளனர்.  தரை தளத்தில் உள்ள தூண்களுக்கும் இந்த கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. சுட்ட செங்கல் மற்றும் சுண்ணாம்பு அரண்மனை வளாகத்திற்குள்  உருவாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மூலிகைகள் மற்றும் முட்டை  பொருட்களுடன் கலந்த சுண்ணாம்பு, தரையை இடுவதற்கு பயன்படுத்தப்பட்டது,. இது கண்ணாடி போன்ற பூச்சுக்களால் மெருகூட்டப்பட்டது.

 

உள்ளூர் தச்சர்களின் நேர்த்தியான கைவினைத்திறன் அரண்மனையில் காணப்பட்ட மரக் கூறுகளில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  சுவர்கள், கூரை சட்டகம் மற்றும் தூண்கள் மற்றும் விட்டங்கள் போன்றவை கட்டுவதற்கு மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலை மற்றும் கனமழைக்காலங்களில் வசிக்கும் படி கேரளாவில் கட்டடக்கலை பாணியை பின் பற்றி கட்டியுள்ளனர்.  உட்புறங்களில் சிறந்த விளக்குகள் மற்றும் காற்றோட்டத்தை எளிதாக்கும் ஒளி கிணறுகள் நிருவியுள்ளனர்.  வளாகத்தின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், அரண்மனை வளாகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எளிதில் அணுகக்கூடிய மூடப்பட்ட தாழ்வாரங்கள் மற்றும் மேல்நிலை நடைபாதைகள் அமைத்து பரந்த அரண்மனை பகுதிகளை ஒன்றோடொன்று இணைத்துள்ளனர்.

கேரளா கட்டடக்கலை பாணியை பின் பற்றி கட்டப்பட்டு உள்ளதற்கு  ஒரு சிறு வரலாறு உள்ளது. வேணாடு அல்லது நாஞ்சில் நாட்டை ஆண்டு வந்தவர்கள் தமிழ் மன்னவர்கள். இது குபகா நாடு என்று அறியப்பட்டது.

14 வது நூற்றாண்டு ஆண்டு வந்த சங்கிரமாதீரா என்ற தமிழ் மன்னரால் கேரளா கோலத்திரி நாட்டு மன்னர்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.  தன்னுடைய இரண்டு சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்து மிகவும் தந்திரமாக ஒரு நட்புறவை பேணி சவாலை கடக்கிறார்.
தமிழ் மன்னரின் மரணத்திற்கு பின் கோலத்திரி நாட்டிலிருந்து வந்த   ராணிகளால் குபகாவில் ஆட்சி நடைபெறுகிறது. ராணிகள் தங்கள் ஊர் தச்சர்களால் தங்கள் நாட்டு பாணியில் கட்டிடம் ஆலயம் கட்டுகின்றனர். தங்களது பெண் தெய்வமான திருவீராட்டுகாவு பகவதியை இங்கைய தெய்வமாக நிறுவுகின்றனர். காவல் வீரர்கள், கலைப்படைப்பாளர்கள், கைவினைக் கலைஞர்கள், அடிமைகள் என எல்லோரும் கோலத்திரி மலையாளிகளின் ஆதிக்கம் நுழைகிறது. .அதன் முதல்  தமிழ் ஆண் மன்னர் ஆதிக்கத்தில் இருந்து பெண் ராணிகளின் ஆதிக்கத்திற்குள் வருகிறது.
பத்மநாபபுரம் அரண்மனை மரத்திலும் கல்லிலும் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு அல்லது ஒரு சிம்பொனி ஆகும்.  சிறந்த பொறியியலின் நினைவுச்சின்னமாக காலத்த்தை தாங்கி நிற்பதில் ஆச்சரியமில்லை.

Leave A Reply

Your email address will not be published.