வர்த்தக நிலையங்கள் இரவு 9 மணிவரை திறக்க கொவிட் தடுப்பு செயலணி அனுமதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து வர்த்தக நிலையங்களும் இரவு 9 மணிவரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆலயங்கள் மற்றும் அனைத்து மதஸ்தலங்களிலும் உற்சவங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல் ரமாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கூட்டத்திலே எவ்வாறு கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என விரிவாக ஆராயப்பட்டதோடு, இந்த நிலையில் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின்படி எந்தவிதமான ஆலய உற்சவங்களும் விழாக்களும் இடம்பெற கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கைக்கு அமைய ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தாக்கள் ஆலய உற்சவங்களையோ விழாக்களையோ தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் இந்த நடைமுறை சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யும் வரை நடைமுறையில் இருக்கும்.
அதேவேளை பயணக்கட்டுப்பாடு தளர்தப்பட்ட நிலையில் சில மாநகரசபை, நகரசபை வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கியது இதனால் வேறு நேரங்களில் மூடுவதால் சில குளறுபடிகள் இருந்தது இதற்கிணங்க நாளை காலை முதல் இரவு 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இரவு 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வர்த்தக உரிமையாளர்கள் தங்களது வர்த்தக நிலையம் திறந்திருக்கும் நேரம் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பேணி நுகர்வேரை அதிகமாக உள்வாங்காது முகக் கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் கைகழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இந்த செயற்பாடுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவனம் செலுத்தாதுவிட்டால் அவர்கள் மீதும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
அதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இதனை பார்க்கின்ற போது கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இந்த மாவட்டம் முழுமையாக விடுபடவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.