சிங்கங்களைத் தவிர வேறு விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களைத் தவிர, வேறு எந்த விலங்குகளும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லையென வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ,கொரோனா தொற்றுக்கு உள்ளான தோர் சிங்கம் குணமடைந்துள்ளதுடன், சீனா என்றழைக்கப்படும் சிங்கம் தற்போது குணமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் ,வேறு எந்த விலங்குகளும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லையென வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக தாங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.