வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி !
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி வசதிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அதன்படி ,ஜனாதிபதியினால் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கான கொவிட் தடுப்பூசியின் முக்கியத்தை கருத்தில் கொண்ட பின்னர் தேசிய கொவிட் கட்டுப்பாட்டு அமைப்பினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு நிமித்தம் வெளிநாடு செல்வோருக்கான ஆவணங்களான வேலைவாய்ப்பு ஒப்பந்த கடிதம், விசா ஆகியவை உள்ளவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்வோர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அந்த வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தொடர்புடைய தகவல்களை சமர்ப்பித்து பதிவு பெற வேண்டும்.
மேலும் ,அடுத்த வாரம் முதல் இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும்.மேலதிக தகவல்களை பெற 1989 ற்கு தொடர்பு கொள்ளலாம்.