தெலிகொன்ன கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு 02 வது தடுப்பூசிகள் 817 பேருக்கு வழங்கப்பட்டது.
குருநாகல் சுகாதார வைத்திய அலுலகத்திற்கு தெலியாகொன்ன கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் குருநாகல் தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் வழங்கப்பட்டது.
இதில் குருநாகல் மாநகர முதல்வர் துசார சஞ்ஜீவ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் கலந்து கொண்டனர்.
குருநாகல் மாநகர முதல்வர் கருத்து தெரிவிக்கையில்..
கொரோனா தொற்று தடுப்பூசிகள் வழங்கும் விடயத்தில் மேல் மாகாணத்திற்கு அடுத்த இடத்தை குருநாகல் மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது. இது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஜொன்ஸ்டனின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டதாகும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் குருநாகல் மாவட்டத்தில் 02 வது தடுப்பூசிகள் ஒரு இலட்சத்திற்கும் மேல்பெற்றுக் கொள்ள வழி வகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்கள் 02 வது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் நாங்கள் பூரிப்படைகின்றோம்.
குருநாகல் நகரில் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்ற மக்கள் பூரிப்படைந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
(இக்பால் அலி)