8 ஆபிரிக்க நாடுகளிலிருந்து பயணிகள் இலங்கையில் தரையிறங்குவதற்கு தடை விதிப்பு (திருத்தம்)
கொரோனா தொற்றுநோய் இலங்கையில் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பேரில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சிஏஏஎஸ்எல்) இயக்குநர் ஜெனரல் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை கீழ்காணும் 8 நாடுகளிலிருந்து இலங்கைக்கு விமானப் பயணிகளாக வருவதை நிறுத்தி வைத்துள்ளார். இது குறித்த அறிக்கை ஒன்றை திரு. அபேவிக்ரெம 06/28 (இன்று) மாலை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 1ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தடை, மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கோலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவாசிலாந்து, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளே இலங்கையில், எந்தவொரு விமான நிலையங்களிலும் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இந்த நாடுகளிலிருந்து பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக திரு.அபேவிக்ரேம தெரிவித்தார்.
இருப்பினும், இலங்கைக்கு தற்போது விமான சீட்டுகளை பெற்று புறப்பட்ட உள்ள பயணிகளுக்கு பயணிகளுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக 06/28 முதல் 07/01 வரை சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் தேமிய அபேவிக்ரேம மேலும் தெரிவித்தார்.