மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் நுழைய தடை
இலங்கையில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக 6 மத்திய கிழக்கு நாடுகளில் (Gulf) இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் நுழைய தடை செய்ய முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரவிருக்கும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நாடுகளுக்கு 14 நாட்களுக்குள் பயணித்த பயணிகள், ஜூலை 01 முதல் 13 வரை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தடையானது ஜூலை 01 ம் தகிதி முதல் அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் குறித்த நாடுகளின் ஊடாக பயணிக்கும் பயணிக்கும் பயணிகளுக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை 01 முதல் ஜூலை 31 வரை 8 ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இலங்கைக்குள் நுழைவதற்கு தடை விதிக்க, அதிகார சபையினால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுப்பாடு 2021 ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.