சிலந்திப் பூச்சிக்கு வீரமரணம் அடைந்த காவல் அதிகாரியின் பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்!
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை சிலந்திப் பூச்சிக்கு மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.
மும்பை காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் துக்காராம் ஓம்பிளே (Tukaram Omble).
2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் திகதி மும்பையில் தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில், லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.
இந்தியாவையே உலுக்கிய இந்த தாக்குதல் 29-ஆம் திகதி வரை நீடித்தது. இதில் 9 பயங்கரவாதிகள் உட்பட 174 பேர் உயிரிழந்தனர், மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
26/11 attack என்றும் அழைக்கப்படும் இந்த தாக்குதலில் உயிர் தியாகம் செய்து, தீவிரவாதி அஜ்மல் கசாபை (Ajmal Kasab) பிடிக்க உதவியாக இருந்தவர் A.S.I துக்காராம் ஓம்பிளே. அவரது தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சிலந்தி இனத்துக்கு ‘Icius Tukarami’ என அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிண்டெல்லா மற்றும் ஐசியஸ் (Phintella and Icius) ஆகிய இரண்டு புதிய இனங்களை விவரிக்கும் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கட்டுரையில், “26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் ஒரு ஹீரோ, 23 தோட்டாக்களை உடம்பில் வாங்கி தாக்குதலின் பயங்கரவாதியை கைப்பற்றிய ஏ.எஸ்.ஐ. துக்காராம் ஓம்பிளே” அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிலந்திக்கு பெயரிடப்படுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.