தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது: செந்தில் பாலாஜி
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது, மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன; மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே இனி நடைபெறும். எனவே தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு என இனி பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது.
கடந்த 2006-11 திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்கள் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவையெல்லாம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மின் உற்பத்திப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 4,23,000 மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூற முடியாது.
2006-11ல் 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 2,04,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2, 08000 பேருக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் எவ்வளவு தேவைப்பட்டது, வரும் காலங்களில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று ஆராய்ந்து அதற்கேற்ப பணிகள் முடுக்கிவிடப்படும் என்றார்.