இனிகலையில் 600 உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் கட்டுகஸ்தோட்டை இனிகலையில் 600 உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கண்டி கட்டுகஸ்தோட்டை இனிகலை கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் கொரோனாவால் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு ரூபா 2500 பெறுமதியான 600 உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமா சபை, கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய இணைந்து ; கண்டி கட்டுகஸ்தோட்டை இனிகலை கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் கொரோனாவால் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உலருணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கட்டுகஸ்தோட்டை இனிகலை ஜும்ஆப் பள்ளிவாசலில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.
சுகாதார விதி முறைகளுக்கு இணங்க இப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் இழந்த சகல சிங்கள தமிழ் முஸ்லிம்; குடும்பங்களுக்கு இந்த உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஹரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் மஹான் தர்மதாச, கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத் தலைவர் எச் சலீம்டீன், செயலாளர் முஜிபுர் ரஹ்மான், பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் எம். எம். மன்சூர், சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி பாயிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)