அமெரிக்கத் தூதுவருடன் நாமல் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று (29) நேரில் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் கிடைக்கும் பல வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் கலந்துரையாடினோம்.
நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.