ஜூலை 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் என்னென்ன தெரியுமா?

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு எடுத்து தீவிர நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் புதுச்சேரியில் கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
அமேசான் ஃபேஷன் சேல்ஸ் ஜூன் 19 முதல் 23 வரை
இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (ஜூன்-30) முடிவடையும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்கலாம். உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி.
அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும், காய்கறி மற்றும் பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். சில்லறை மதுபான கடைகள் மட்டுமே காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் மற்றும் முழுமையான உணவகங்களுக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பார் வசதிகள் இரவு 9 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
சரக்கு போக்குவரத்து எல்லா நேரங்களிலும் அனுமதிக்கப்படும் மற்றும் தனியார் / அரசு பொது போக்குவரத்து அனைத்து நாட்களிலும் 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இரவு 9 மணி வரை அனைத்து மத வழிபாட்டுதலங்களும் பொது தரிசனத்திற்காக திறக்கப்படும். 100 பேர் திருமணத்தில் பங்கேற்கலாம்.
இறுதிச்சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கு 100 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த வழிகாட்டுதலின் படி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.
அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படு. பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இருக்காது.
இதேபோல் சினிமா தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட தடை தொடரும். சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.