இலங்கையில் 2,750 இந்திய பிரஜைகள்? டெல்டா ஆபத்து.

டெல்டா பரவலுக்கு மத்தியில்,
கொழும்பு – கொம்பனிதெரு பகுதியிலுள்ள கட்டிட நிர்மாண இடமொன்றில் கொவிட் டெல்டா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு கடமையாற்றிய 328 பேருக்கு கொவிட் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொகர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
இதன்படி ,கஹதுடுவ பகுதியில் டெல்டா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட பின்னணியில், அவர் கடமையாற்றிய இடத்திலுள்ளவர்களுக்கு உடனடி பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அவ்வாறு ,நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலேயே இந்த மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அதேவேளை , மாதிவல பகுதியில் கடந்த 22ம் திகதி டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் ,இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக, இந்த நபருக்கு கொவிட் டெல்டா வைரஸ் தாக்கம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.