முல்லைத்தீவில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தினை சேர்ந்த 45 அகவையுடைய சாஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.பொலீஸ் வாசல் தலத்தில் உள்ள காவல் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியினை எடுத்து தனக்குதானே தலையில் சுட்டுக்கொண்ட இவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்க்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.