யாழில் மேலும் ஒருவரைப் பலியெடுத்தது கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் சாவடைந்துள்ளார்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.