நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை! – உறவினர்கள் முறைப்பாடு.

யாழ்., நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவரே மீன்பிடிக்கக் கடலுக்கு சென்ற நிலையில் இன்றிரவு வரை கரை திரும்பவில்லை என உறவினர்களால் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது
யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்குச் சென்று கரை திரும்பாத நபர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.