சமுர்த்தி உதவி பெறும் குடும்த்திற்கு புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் விழா.
ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி உதவி பெறும் குடும்த்திற்கு புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டுதல் இப்பாகமுவ மெடிகே தேத்தலியங்க பிரதேசத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி உதவி பெறும் குடும்த்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 526 மெடிகே தேத்தலியங்க கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் இப்பாகமுவ உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினருமான எம். எஸ்.எம். பாஹிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதில் சமுர்த்தி வங்கி முகாமயாளர். சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் எனப்பலர் பலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)