டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட லாசித் மலிங்கா.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா கடந்த 2004ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமாகி 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட சர்வதேச கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆனாலும் இன்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் மலிங்கா அச்சுறுத்தக் கூடிய ஒரு பவுலராகவே சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் 37 வயதாகும் லசித் மலிங்கா கடந்த மார்ச் மாதம் முதல் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட்டிலும் இலங்கை அணிக்காக விளையாடவில்லை.
அதனால் அவரது ஓய்வு குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மலிங்கா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னால் இப்போதும் டி20 கிரிக்கெட்டில் 24 பந்துகளை எளிதாக வீச முடியும் சொல்லப்போனால் நான் 200க்கும் மேற்பட்ட பந்துகளை வீசுவேன் என்றார்.