யாழில் 90 பேர் உட்பட வடக்கில் நேற்று 128 பேருக்குக் கொரோனா!
வடக்கு மாகாணத்தில் மேலும் 128 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 90 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 06 பேருக்கும் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 10 பேருக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.