மாணவர்களுக்கான இணைய தள மூலமாக நடைபெற்ற இலவச வகுப்புக்கள்.

குருநாகல் மாவட்டத்திலுள்ள வலய கல்வி வலயங்களின் அடிப்படையில் குருநாகல் மாவட்ட அஹதிய்யாப் பாடசாலைகளும் ஆறு வலயங்களாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு பொறுப்பாக ஆறு வலய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் மேற்பார்வையில் அஹதிய்யாப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன என அஹதிய்யா குருநாகல் மாவட்ட சம்மேளனத் தலைவர் தேசபந்து கலாநிதி பீ.எம்.பாரூக் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்த ஆறு வலயங்களும் இவ்விரண்டு வலயங்களாக இணைக்கப்பட்டு இம் மாத
ஜஇம்மாத ம் 4ந்திகதி முதல் குருநாகல் ,நிகவரட்டிய, கிரியுள்ள ஆகிய மூன்று இடங்களில் இணைய தள மூலமாக அஹதிய்யா வகுப்புகள் இலவசமாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளருக்கும் அஹதிய்யா மத்திய சம்மேளனத்துக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குருநாகல் மாவட்ட அஹதிய்யா சம்மேளன தலைவர் கலாநிதி பீ.எம்.பாரூக் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சம்மேளன கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த வலய வகுப்புக்கள் இணைய தள மூலமாக ஆரம்பிக்கப்பட்டன.
ஜமுதலில் இம்மாதம் 4ந்திகதி முதல் 9,10 வகுப்புகளுக்கான பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வாரம் முதல் 11 ஆம் ஆண்டுக்கான வகுப்புகளும் 18ந்திகதி முதல் 7,8 வகுப்புகளும் 25ந் திகதி முதல் ஏனைய அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட சம்மேளன தலைவர் பீ.எம்.பாரூக் தெரிவித்தார்.
சிங்கள மொழி மூலமாக கல்வி கற்கும் அஹதிய்யாப் பாடசாலை மாணவர்களுக்காக இணைய தள மூலமாக வகுப்புகளை நடத்துவதற்கு குருநாகல் மாவட்ட அஹதிய்யாப் பாடசாலைகளின் சம்மேளனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு வகுப்புகளிலுமுள்ள மாணவர்களின் தேவைப்படுவதால் குருநாகல் மாவட்ட அஹதிய்யாப் பாடசாலைகளின் அதிபர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் சிங்கள மொழி மூலம் கல்வி பயிலும் மாணவர்களின் விபரங்களை உடனடியாக அறிவிக்குமாறு அஹதிய்யா குருநாகல் மாவட்ட சம்மேளனத் தலைவர் தேசபந்து கலாநிதி பீ.எம்.பாரூக் தெரிவித்தார்.
(இக்பால் அலி)