8 வயது மகனை துடி துடிக்க கொலை செய்த தாய்! நடந்தது என்ன? 30 மாதங்களுக்கு பின் சிக்கிய சம்பவத்தின் பின்னணி
இந்தியாவில் தாய் ஒருவர் தன்னுடைய 8 வயது மகனை கொலை செய்து, உடலை எரித்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் Viramgam நகரின் Jalampur கிராமத்தில் Hardik Patel என்ற 8 வயது சிறுவன், தன்னுடைய பெற்றோர், தங்கை மாமா மற்றும் தாத்த பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், மீண்டும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
சுமார் 30 மாதங்களுக்கு மேலாக சிறுவன் குறித்து தேடியும் எந்த ஒரு தகவ்லௌம் கிடைக்காத நிலையில், சமீபத்தில், காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு படை மூலம் தேடுதல் வேட்டை தீவிரமானது.
அப்போது, பொலிசார் சிறுவன் இருந்த கிராமத்தில் இருக்கும் கிராமவாசிகளிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, Hardik Patel-ன் தாய்க்கும், அவரது மாமாவான ராமேஷ்க்கு ஒரு முறையற்ற உறவு இருப்பதைப் பற்றி அவர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சிறுவன் காணமல் போன பிறகு ரமேஷும் கிராமத்தை விட்டு வெளியேறி Bharuch-ல் வசித்து வருவதாக கூறியுள்ளனர், இதையடுத்து பொலிசார் சிறுவனின் தாய் மற்றும் மாமாவை பிடித்து கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் குற்றத்தைக் ஒப்புக் கொண்டுள்ளனர்.
விசாரணையில் அவர்கள், நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், அதை மற்றவர்களிடம் சொல்லிவிடுவான் என்ற அச்சத்தில், சிறுவன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, வயல் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவனை கழுத்தை நெரித்து கொலை செய்து, அதன் பின் அவனது உடலை எரித்து பள்ளத்தில் புதைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பொலிசார் இந்த சம்பவத்தில் மேலும், சிலர் மீது சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.