பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்.

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசிகள், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் இத்துடன் , 50,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்று (06) இரவு இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.