பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள், 4 பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.
ஆர்.டி.பிசிஆர் சோதனையில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது, ஆனால் வீரர்கள் பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.
இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக வியாழனன்று ஒரு நாள் தொடர் தொடங்கவிருப்பதால் முற்றிலும் வேறு அணியை தேர்வு செய்யும் நிலைக்கு இங்கிலாந்து வாரியம் தள்ளப்பட்டுள்ளது, இது இன்று இரவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
வரும் வியாழனன்று கார்டிஃப் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறுகிறது, இந்த இங்கிலந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டன்.
பாகிஸ்தானுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்து ஆடுகிறது.
இந்நிலையில் 3 வீரர்கள் உட்ப்ட 7 பேருக்குக் கொரோனா என்பதால் தேர்வு செய்யப்பட்ட ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் தனிமைப்படுத்தப்பட்டன. இன்று புதிய அணி அறிவிக்கப்படவுள்ளது.“டெல்டா வேரியண்ட் கொரோனா உருமாறிய வைரஸின் அச்சுறுத்தலைக் கவனமேற்கொண்டு அனைத்து வீரர்களும் அன்னியப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ. டாம் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக வியாழனன்று ஒரு நாள் தொடர் தொடங்கவிருப்பதால் முற்றிலும் வேறு அணியை தேர்வு செய்யும் நிலைக்கு இங்கிலாந்து வாரியம் தள்ளப்பட்டுள்ளது, இது இன்று இரவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மீதி வீரர்களுக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட வேண்டும், புதிய அணி தேர்வு செய்தால் அந்த வீரர்களுக்கும் கோவிட்-19 டெஸ்ட் செய்யப்பட வேண்டும் எனவே இங்கிலாந்து கிரிக்கெட்டில் மொத்தமாக இப்போது குழப்ப நிலை நீடிக்கிறது
இதனையடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீண்டும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் கவுண்ட்டி செட்-அப்பில் ஏகப்பட்ட இளம் திறமைகள் இருக்கின்றன.