28 பேருடன் பயணித்த விமானம் திடீர் மாயம்.
ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் இன்று 28 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ,பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – கம்சாட்ச்கி நகரத்திலிருந்து பழனா செல்லும் வழியில் ரஷ்ய AN -26 என்ற விமானத்தினூடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“AN -26 விமானத்தில் ஆறு பணியாளர்கள் ஒரு குழந்தை உட்பட 22 பயணிகள் உள்ளனர்.
ரஷ்ய அவசர அமைச்சகத்தின் ஹெலிகொப்டர் மற்றும் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன” என்று அவசர சேவைகளின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ,விமானம் தரையிறங்க முயன்றபோது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.