சேதனப்பசளை உற்பத்தி பாவனை தொடர்பான பயிற்சி நெறி!
அரசாங்கத்தினால் நாட்டில் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான பயன்பாட்டு அணுகுமுறைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் மாகாண விவசாய திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட போதனாசிரியர்களுக்கு சேதனப் பசளை உற்பத்தி மற்றும் பாவனை தொடர்பான பயிற்சி நெறியானது மாவட்ட விவசாய பயிற்சி நிலையம், ஒட்டிசுட்டானில் பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ச.யாமினி தலைமையில் நடைபெற்றது.
குறித்த பயிற்சி நெறியின் வளவாளர்களாக பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலைய மேலதிக பணிப்பாளர் கலாநிதி அரசகேசரி, மாவட்ட விவசாய பணிப்பாளர் இ.கோகுலதாசன், வவுனியா விவசாய கல்லூரி முதல்வர் எம்.எஸ் றினோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பயிற்சி நெறியில் 58 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது செயன்முறை ரீதியான களப்பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சேதனப்பசளை உற்பத்தி(கூட்டெரு உற்பத்தி, அசோளா செய்கை, மண்புழு உர உற்பத்தி, சேதன திரவ பசளை உற்பத்தி) தொடர்பான தகவல்களைப் பெற விரும்புபவர்கள் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் ஒட்டிசுட்டான், பண்ணை முகாமையாளர், கி.கீர்த்திகன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.