ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமனம்.

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் – நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின், டி20 அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ள பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படும் நோக்கில், உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்களில் ஆடி, டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட ஸ்பின் ஆல்ரவுண்டர் ரஷீத் கானை கேப்டனாக நியமித்துள்ளது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். துணை கேப்டனாக நஜிபுல்லா ஜட்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையை ஜெயிக்கணும்.. ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமனம்