பசில் ராஜபக்க்ஷவின் வருகையானது சகவாழ்வு நிலையானதாக மாற்றம் பெறுவதற்கு வழிகோலும்.
பசில் ராஜபக்ஷவின் வருகையானது தற்போதைய இக்கெட்டான தருணத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவைக் கொண்ட நாடாகவும் முஸ்லிம் சிங்கள மக்களிடையே காணப்படும் சகவாழ்வு நிலையானதாக மாற்றம் பெறுவதற்கு மேலும் வழிகோலுமென முஸ்லிம்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
சர்வதேச ரீதியிலான கொரோனா 19 தொற்றுப் பரவலுக்கு மத்தியில் விசேடமாக அரசியலிலும் பிரச்சினைகள் குறைகளைக் காண்கின்றோம். அந்த அடிப்படையில் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஒரு பெரும்பாதிப்பாக உள்ள நிலைமையில் பசில் ராஜபக்க்ஷவின் அரசியல் வரவு பொருளாதார அபிவிருத்தியில் ஒரு நிலையான மாற்றத்திற்கு உதவுமென்பது இந்த நாட்டு மக்களுடைய முழு எதிர்பார்ப்புமாகும்.
அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுப் பதவியை ஏற்பதன் மூலம் நாங்கள் 2015 ஆண்டுகளில் பொருளாதார மேம்பாட்டில் ஒரு தன்னிறைவைக் கொண்ட நாடாக இலங்கை விளங்கியது. அந்த ஒரு நல்ல நிலையில் இருந்த இலங்கையை மீண்டும் பசில் ராஜபக்க்ஷவின் வருகையின் மூலம் ஒரு நல்ல காலம் கிடைக்கும் என்பதில் இந்த நாட்டு முஸ்லிம்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
அது மட்டுமல்ல பசில் ராஜபக்ஷ அவர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்களுடன் அரசியல் நடவடிக்கைகளில் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்துள்ளார். இது உண்மையிலேயே விடேசமாக முஸ்லிம்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாகவும் நல்லதொரு பொற்காலமாக அமையும் என்பது எவ்வித சந்தேகமுமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)