யாழில் வர்த்தகர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் இன்று கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக் காயத்துக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றது என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது எனப் பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.