மத்திய அமைச்சர்களின் சராசரி வயது 58-ஆக குறைந்தது
மத்திய அமைச்சா்களின் சராசரி வயது 61-இல் இருந்து 58-ஆக குறைந்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றுக் கொண்டனா். இவா்களில் 36 போ் புதியவா்கள்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள தா்பாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமுகங்கள் உள்பட 15 போ் கேபினட் அமைச்சா்களாகவும், 28 போ் இணையமைச்சா்களாகவும் பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதில் இளம் தலைவா்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சா்களின் சராசரி வயது 61-இல் இருந்து 58-ஆக குறைந்துள்ளது. மத்திய அமைச்சரவையில், 72 வயது நிரம்பிய சோம் பிரகாஷ் மூத்த அமைச்சராக உள்ளார். மேற்கு வங்க மாநிலம், கூச்பிகாா் மக்களவை எம்.பி. நிசித் பிராமாணிக் (35) இளம் அமைச்சராக இடம்பெற்றுள்ளாா்.