மத்திய அமைச்சரவையில் எத்தனை பேர் வரை இடம்பெறலாம்?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 36 பேர் புதியவர்கள்.
முதல் முறை எம்.பி.க்களான பாரதி பவார் (மகாராஷ்டிரம்), விஸ்வேஷ்வர் துடு (ஒடிஸா), முன்ஜபாரா மகேந்திரபாய் (குஜராத்), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்குர், ஜான் பார்லா, நிசித் பிராமாணிக் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இணை அமைச்சர்களாக இருந்த 7 பேர் கேபினட் அமைச்சர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.
புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட 43 பேரையும் சேர்த்து மத்திய அமைச்சரவை பலம் 78-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 81 பேர் வரை இடம்பெற முடியும்.