இலங்கை அரசியலில் சகலதுறை ஆட்டக்காரர் பஸிலைப் புகழ்கின்றது ‘மொட்டு’.

“இலங்கை அரசியல் களத்தில் சகலதுறை ஆட்டக்காரரே பஸில் ராஜபக்ச. அவரின் அதிரடி ஆட்டத்தைப் பொறுத்திருந்து பாருங்கள்.”
இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கிரிக்கெட் அணியொன்றை எடுத்துக்கொண்டால் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். ஆனால், சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு எல்லாம் தெரியும்.
இவ்வாறுதான் இலங்கை அரசியல் களத்தில் பஸில் ராஜபக்ச சகலதுறை ஆட்டக்காரர். அவரின் அதிரடி ஆட்டத்தைப் பொறுத்திருந்து பாருங்கள்” – என்றார்.