நிதி அமைச்சராக பசில் ராஜபக்க்ஷ பிரமாணம்.
பசில் றோஹண ராஜபக்க்ஷ அவர்கள், இன்று (ஜூலை, 08) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, எனது முன்னிலையில் நிதி அமைச்சராகப்்பிரமாணம் செய்து கொண்டார்.
அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் இடத்திற்கு
ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ பெயர்,கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (ஜூலை, 07) பசில் ராஜபக்க்ஷ அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.
பசில் ராஜபக்க்ஷ அவர்கள், 2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாக நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்ட பசில் ராஜபக்க்ஷ அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
கொவிட் நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பசில் ராஜபக்ஷ கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றினார்.
பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி,
மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றின் தலைவராகவும் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் உள்ளார்.