முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “குரு அபிமானி “கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “குரு அபிமானி “கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் திட்டத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “குரு அபிமானி “கொடுப்பனவு வழங்கும் நிகழ்வுகள் மாவட்ட ரீதியாக நடைபெற்று வருகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது .
இதன்போது மாவட்டத்திற்கான நிகழ்வின்போது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு “குரு அபிமானி “கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது .
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ .முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மாவட்டத்திற்கான “குரு அபிமானி “கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ .நவேஸ்வரன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர் ஜி.அருணன் , மண்முனை வடக்கு முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் டி .மேகராஜ் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.