கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-இலங்கை கிரிக்கட் போட்டிகள் ஒத்திவைப்பு.
இலங்கை கிரிக்கட் அணியில் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் இந்தியா-இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சிவிப்பாளர்கள் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
எவ்வாறாயினும் எந்தவொரு வீரரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகாத போதிலும் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த அனைத்து வீரர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒருநாள் சர்வதேச போட்டிகள் இப்போது ஜூலை 17, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளிலும, T20 போட்டிகள் ஜூலை 24, 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.