24 நாடுகளின் விமானங்களுக்கு ஓமன் நாடு தடை.

கொரோனா தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 24 நாடுகளின் விமானங்களுக்கு ஓமன் நாடு தடை விதித்துள்ளது.
அதுகுறித்து ஓமன் சுல்தானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் சுட்டுரையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு முயற்சியாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 24 நாடுகளின் பயணிகள் விமானங்கள் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை தொடரும் எனவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.