தென்னை மரக்கன்று நடும் திட்டம் ஆரம்ப நிகழ்வு.

அரசினால் நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நடும் வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்தில் வெற்றி காணிகளில் தென்னை மரக்கன்று நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட உள்ள நிலையில்
இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் பிரியந்த பெரேரா அவர்களின் நெறிபடுத்தலின் கீழ் எழுதுமட்டுவாளில் உள்ள யாழ் ஆயருக்கு சொந்தமான காணியில் 700 தென்னை மரங்களை நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் மாவட்ட கியூடெக் நிறுவனத்தின் தலைவர் யூயின் பிரான்சிஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னை பனை மற்றும் ரப்பர் செய்கை மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோ வினால் குறித்த தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் எழுதுமட்டுவாளில் யாழ் ஆயருக்கு சொந்தமான காணியில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிட்டதக்கது.