சௌபாக்கியா உற்பத்தி கிராமம் முசலி மருதமடு கிராமத்தில் அங்குரார்ப்பணம்!

சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்பு திட்டமானது முசலி பிரதேச செயலர் பிரிவில் மருதமடு கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரருமான காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முசலி பிரதேச செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் இத் திட்டத்தை செயற்படுத்தும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.