பெருந்தொகைப் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது!
பெருந்தொகைப் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது!
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை நவமுகவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பெண் பெருந்தொகைப் பணமோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று நவகமுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வந்தததுக்கு அமைவாகவே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சமன்சிறிகம தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து 4 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்ணுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல நீதிமன்றங்களில் 32 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.