புதையல் தோண்ட முயற்சித்த மூவர் சிக்கினர்!

குருநாகல் மாவட்டம், கொபேய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள், மண்வெட்டி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திய கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொபெய்கனே, கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.