ஜே.சி.பி இயந்திரம் வழங்கி வைக்கும் வைபவம்.
இன்றைய கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக செயற்படும் பணியாளர்கள் எல்லோரும் உயிரையே பணயம் வைத்து செயற்படும் ஒரு போராளியின் நிலைக்கு ஒப்பானதாகும். இதில் அரசியல், கட்சி , இயக்கம். தனவந்தர்கள் என்ற வேறுபாடுகளின்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து தியாக அர்ப்பணிப்போடு உன்னதமான பணியை செய்து வருகின்றனர் என்று கண்டி மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும்
மற்றும் கண்டி மாவட்ட கொவிட் 19 கொரோனா செயலணியின் தலைவருமான கே. ஆர். ஏ. சித்தீக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஜேசிபி இயந்திரம் வழங்கி வைக்கும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் ஒட்டவமாவடி மஜ்மாநகர் மையவாடியில் இடம்பெற்றது.
நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலிசப்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகார்pகள் எனப் பலர் கலந்து கொண்டனர். குறித்த இயந்திரம் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் கண்டி மாவட்ட கொவிட் 19 கொரோனா செயலணியின் தலைவருமான கே. ஆர். ஏ. சித்தீக் தலைமையில் சென்ற குழுவினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இது குறித்து கண்டி மாவட்ட கொவிட் 19 கொரோனா செயலணியின் தலைவரும் மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவருமான கே. ஆர். ஏ. சித்தீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
இந்த மையவாடியில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி சிங்கள, தமிழ் கிறிஸ்தவ முதலிய மக்களுடைய உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு இக்கெட்டான தருணத்தில் உடல் நல்லடக்கத்திற்காக எல்லோரும் ஒன்று பட்டு செயற்கின்றமை ஒரு முக்கிய அம்சமாகும். இது எமம்முடைய முஸ்லிம் சமூகத்திற்கிடையே ஓர் ஆரோக்கியமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதுதீன், உடுநுவர பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ் எம் எஸ் எம். சஹ்வான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் கம்பளை பிரதி நகரபிதா, பூஜாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ரசான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடுகளின்றி உள்வாங்கப்பட்டு ஓர் அணியாக நின்று செயற்படுகின்றனர். இந்த ஜனாஸா நல்லடக்க விடயத்தில் கடந்த நான்கு மாத காலமாக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த அமைப்பினர் இன்றுடன் ஆறுவதாக தடவையாக விஜயம் செய்து அங்குள்ள ஒவ்வொரு பிரச்சினைகளையும் கேட்டறிந்து எங்களால் இயன்ற தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்லாதரவினையும் பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றோம்.
இந்த மையவாடியில் ஜேசிபி இயந்திரம் அடிக்கடி பழுதவடைவதாகவும் அதற்கு பெருந் தொகையான பணம் செலவிடப்படுவதாகவும் என எம்மிடம் வைக்கப்பட்ட கோரிக்கை இணங்க இந்த இயந்திர கையளிக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றகுமான், பாக்கிஸ்தான் நாட்டுக்கான விதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் ஜம்மிய்யதுல் சபையின் கொரோனா தொற்றுச் செயற்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் மௌலவி எச். உமர்தீன், கொவிட் 19 தொற்று தடுப்பு செயலணியின் ஜனாதிபதியின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தானி , ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ. எம். நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசசபை செயலாளர் எஸ் எம். சிஹாப்தீன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம் அல் அமீன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரியாஸ், ஜம்மிய்யதுல் சபையின் கொரோனா தொற்றுச் செயற்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் மௌலவி எச். உமர்தீன், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை பள்ளிவாயல்களின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(இக்பால் அலி)