கடலட்டை பண்ணையை சட்ட ரீதியாக அகற்றுவதற்கு நடவடிக்கை!
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் உடைய கடல் அட்டை பண்ணையினை எவ்வாறு அகற்றுவது என்பது தொடர்பாக நேற்றைய தினம் கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கௌதாரிமுனை கடற்தொழிலாளர்கள், கௌதாரிமுனை பகுதி இளைஞர்கள் மற்றும் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் கௌதாரிமுனை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சீனாவின் உடைய கடல் அட்டை பண்ணை எவ்வாறு அகற்றுவது? இதற்கான சட்ட ஆலோசனைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது? என்பன தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கடற்றொழிலாளர் சங்கங்கள் எவ்வாறான செயற்பாடுகளை இவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைக்கு எதிராக மேற் கொள்ளப்படுவது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.