பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க அறிவுறுத்தல்
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாநில அரசுகள் பள்ளிகளைத் திறப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டம் அதிகமாக இருந்தால் சமூக பரவல் ஏற்படும் என்பதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.