ஆக்கபூர்வமான முறையில் இணைவழி கற்பித்தல்.

கொரோனா தொற்று இடர் நிலை காரணமாக 28-04-2021 இன் பின்னர் பாடசாலைகள் மூடப்பட்டதனைத் தொடர்ந்து அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாடசாலை ஆசிரியர் ஆசிரியை மூலம் நேர அட்டவணை வழங்கப்பட்டு நிகழ்நிலை வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
எனினும் வகுப்புக்கள் நடத்தப்பட்ட போதிலும் வசதியில்லாத பிள்ளைகள் இணைந்து கொள்வதில்லை. பாடங்களுக்கு இணைந்து கொள்ள முடியாத வறிய மாணவிகளுக்கு பழைய மாணவிகள் குழுமத்தினால் அவர்களுக்கு தேவையான தொலைக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு ஆக்கபூவாமான முறையில் இணைவழி கற்பித்தல் நடத்தப்பட்டு வருவதாக என்று கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் சிஹானா ரஹீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இப்பாடசாலையில் 2500 மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். எனினும் ஆசியை குழாத்தினால் நடத்தப்படும் நிகழ்நிலை வகுப்புக்களுக்கு குறிப்பிட்டளவு மாணவிகள் சமூகமளிப்பதில்லை. இது தொடர்பில் கவனம் செலுத்தி தகவல்களைப் பெற்றுக் கொண்டதனை அடுத்து 30 வறிய மாணவிகள் இனங்காணப்பட்டனர்.
பள்ளிவாசல்கள் மூலமாக அம்மாணவியினர்களது நிலைமையினை அறிந்து அவர்களுக்குத் தேவையான என்ரைட் போன், டெப், மடிக்கணனி, ஐபேட், கணனி மற்றும் அதற்குத் தேவையான இணையத்தள வசதிகள் அனைத்துப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
எமது பாடசாலை ஆசிரியை ஆசிரியர் குழாத்தினால் நடத்தப்படும் நிகழ்நிலை வகுப்புக்களை எல்லாமாணவிகளும் சமநிலையோடு கல்வி கற்க வேண்டும் என்ற விடயத்தில் இப்பாடசாலை பழைய மாணவிகள் சங்கத்தினர் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகின்றனர்.
அவை மட்டுமல்ல பெரு எண்ணிக்கையிலான மாணவிகளுக்கு சுமார் டேட்டா இணைய வசதிகளைச்செய்து கொடுத்துள்ளனர். குறிப்பாக இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த சாதாரணம் க. பொ. த உயர் தரம் ஆகிய வகுப்பு மாணவிகளுக்கு பாடசாலை மீளத் திறக்கும் வரையிலும் அதிகளவிலான மாணவிகளுக்கு டேட்டா இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றுக் காரணமாக கல்வி அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுததுகின்ற தொலைக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக கல்வி வளநிலையங்கள் நிகழ் நிலை வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
எமது பாடசாலை ஆசிரியை குழாத்தினால் முன்னெடுக்கப்படும் இணைவழி கற்றலை எமது பாடசாலை மாணவிகள் பயனுள்ள முறையில் பயன்படுத்தி வருகின்றனர். கண்டி பழைய மாணவிகள் சங்கத்தினர் எமது மாணவிகள் நவீன இணைய வழி கற்றலை மேற்கொள்ள ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்து வருகின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் அவர்களது ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)